Friday, January 13, 2006

ஹஜ்ஜு ஒரு பார்வை

ஹஜ்ஜு மூன்று வகைகளாக நிறை வேற்றலாம்

1. இஃப்ராத் : ஹஜ்ஜுக்காக மட்டும் நிய்யத் வைத்து இஹ்ராம் கட்டுதல்
நிய்யத் : லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூறி இஹ்ராமுக்கு நிய்யத் வைத்தல்.
2. கிரான் : ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துநிய்யத் வைத்து இஹ்ராம் கட்டுதல்
நிய்யத் : லப்பைக்க ஹஜ்ஜன்வஉம்ரதன் என்று கூறி இஹ்ராமுக்கு நிய்யத் வைத்தல்.
3. தமத்துஃ : ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டவேண்டிய இடத்தில் முதலில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி உம்ராவை நிறைவேற்றிய பிறகு மக்காவில் தங்கியிருந்து ஹஜ்ஜுக்காக எட்டாவது நாளன்று இஹ்ராம் கட்டுதல்.
நிய்யத் : இவ்வாறு செய்பவர் உமராவுக்கு இஹ்ராம் கட்டும்போது லப்பைக்க உம்ரதன் என்றும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும்போது லப்பைக்க ஹஜ்ஜன் என்றும் கூறி இஹ்ராம் கட்டவேண்டும்.

தல்பியா : 'லப்பைக் அல்;லாஹும்ம லப்பைக், லப்பைக்க லாஷரீக்க லக்க லப்பைக் இன்னல ஹம்த வந்நிஃமத்த லக்க வல்முல்க் லா ஷரீக்கலக்;'. (தல்பியாவை இஹ்ராம் கட்டியது முதல் 10வது நாள் கல் எறிவது வரை ஓதவேண்டும்)

ஹஜ்ஜு நாட்களில் ஹாஜிகள் செய்யவேண்டியவை :(துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்யவேண்டியவை.)
இஃப்ராத் முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்ய வேண்டியவை
1. மீக்காத்திலிருந்து இஹ்ராம் கட்டுதல்
2. தவாஃப் செய்தல் (ஹஜருல்அஸ்வதிலிருந்து துவங்கி கஃபாவைச் சுற்றி 7 முறைகள் வலம் வருதல்)
3. ஸஃயீ செய்தல் ஸஃபாவிலிருந்து துவங்கி மர்வா வரை 7 முறைகள் ஸஃயீ செய்வது. (ஸஃபா முதல் மர்வா வரை ஒரு சுற்றும் மர்வா முதல் ;ஸஃபா வரை இன்னொரு சுற்றுமாகும்)
குறிப்பு: தவாபிற்குப் பின்னர் ஸஃயீ செய்ய வில்லையெனில் தவாபுல் இஃபாளா (தவாப் ஸியாரா)வுக்குப்பின் நிறைவேற்ற வேண்டும்

கிரான் முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்ய வேண்டியவை
1.. மீக்காத்திலிருந்து இஹ்ராம் கட்டுதல்
2. தவாஃப் செய்தல் (ஹஜருல்அஸ்வதி-லிருந்து துவங்கி கஃபாவைச் சுற்றி 7 முறைகள் வலம் வருதல்)
3. ஸஃயீ செய்தல் ஸஃபாவிலிருந்து துவங்கி மர்வா வரை 7 முறைகள ஸஃயீ செய்வது. (ஸஃபா முதல் மர்வா வரை ஒரு சுற்றும், மர்வா முதல் ;ஸஃபா வரை இன்னொரு சுற்றுமாகும்)
குறிப்பு: கிரானை நிறைவேற்றுவோர் ஸஃயீயை முடித்தபின் முடியை சிரைக்கவோ வெட்டவோ செய்யாது இஹ்ராமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டு தடுக்கப்பட்டவை களைச் செய்யாது பேணி வர வேண்டும்.தவாபிற்குப் பின்னர் ஸஃயீ செய்யவில்லை-யெனில் தவாபுல் இஃபாளா (தவாப் ஸியாரா) வுக்குப் பின் நிறைவேற்ற வேண்டும்

தமத்துஃ முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்ய வேண்டியவை
1. மீக்காத்திலிருந்து இஹ்ராம் கட்டுதல்
2. தவாஃப் செய்தல் (ஹஜருல்ஸ்வ திலிருந்து துவங்கி கஃபாவைச்சுற்றி 7 முறைகள் வலம் வருதல்)
3. ஸஃயீ செய்தல் ஸஃபாவிலிருந்து துவங்கி மர்வா வரை 7 முறைகள்;;ஸஃயீ செய்வது.( ஸஃபா முதல் மர்வா வரை ஒரு சுற்றும்,மர்வா முதல் ;ஸஃபா வரை இன்னொரு சுற்றுமாகும்)
4. தலை முடியை கத்தரிக்கவோ சிரைக்கவோ செய்தல்
5. இஹ்ராமிலிருந்து விடுபடல்;;.
குறிப்பு : உம்ராவை முடித்த இவர்கள் 8 ஆம் நாள் இருந்த இடத்திலிருந்துஇஹ்ராம் அணிந்த பின் மினாவுக்குச் செல்ல வேண்டும். 8-வது நாள் (யவ்முத்தர்வியா) மினாவுக்குச் செல்லுதல்(மினாவில்லுஹர்,அஸர்,இஷாதொழுகை களை இரண்டிரண்டுரக்அத்களாக (கஸ்ர்)சுருக்கித் தொழுதல்) மினாவுக்குச் செல்லுதல்(மினாவில்லுஹர்,அஸர்,இஷா தொழுகைகளை இரண்டிரண்டுரக்அத்களாக (கஸ்ர்) சுருக்கித் தொழுதல்) மினாவுக்குச் செல்லுதல்(மினாவில் லுஹர்,அஸர், இஷா தொழுகைகளை இரண்டிரண்டுரக்அத்களாக (கஸ்ர்) சுருக்கித் தொழுதல்)

இஃப்ராத், கிரான், தமத்துஃ மூன்று முறைகளில் நிறைவேற்றுபவர்களுக்கும் பொதுவானவைகள்

துல்ஹஜ் 9-வது நாள்
1. சூரிய உதயத்திற்குப்பிறகு அரஃபாத் செல்லுதல். அரஃபாத்தில் லுஹர், அஸர் இருதொழுகைகளையும் கஸ்ராகவும் ஜம்ஆகவும்- சுருக்கியும் சேர்த்தும்-இரு ரகஅத்களாக தொழ வேண்டும்.( இங்கே ஒரு அதான் இரு இகாமத்துகள் என்பது நினைவிருக்கட்டும்) இங்கு அதிகமாக குர்ஆன் ஓதவும், திக்ர், தல்பியா, தக்பீர், தஸ்பீஹ், தஹ்லீல் ஓதிக்கொண்டிருக்கவும் வேண்டும். துஆ ஓதும்போது ஜபலுர் ரஹ்மத்தை நோக்காது கிப்லாவை முன்னோக்கியே ஓதவேண்டும்.
2. சூரியன் அஸ்தமித்ததும் முஸ்தலிஃபா செல்லுதல்.
3. முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும்; சேர்த்தும் சுருக்கியும் (ஜம்உ,கஸ்ராக) தொழவேண்டும்.(அதாவது : காலதாமதமாயினும் மஃரிபை முதலில் 3 ரகஅத்களாகவும் பின்னர் இஷாவை 2 ரகஅத்களாகவும் தொழ வேண்டும். இங்கே ஒரு அதான் இரு இகாமத்துகள் என்பது நினைவிற் கொள்க)
4. அன்றைய இரவில் முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரு வரை தங்குதல்.

10-வது நாள் ஃபஜ்ருக்குப்பின் சூரிய உதயத்ற்கு முன்னர் மினாவுக்குச் செல்லுதல்
1. ஜம்ரத்துல் அகபா பெரிய ஜமராவுக்கு மட்டும் கல் எறிதல். (கற்களை மினாவிலும் பொறுக்கிக் கொள்ளலாம்)
2. ஆண்கள் தலை முடியை கத்தரிக்கவோ முழுவதுமாக சிரைக்கவோ செய்தல். பெண்கள் தலை முடியின் விரல் நுனி அளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும்.
3. இஹ்ராமிலிருந்து விடுபடுதல்.
4. மக்கா சென்று தவாபுல் இஃபாளா செய்தல்

ஃபஜ்ருக்குப்பின் சூரிய உதயத்திற்கு முன்னர் மினாவுக்குச் செல்லுதல்
1. ஜம்ரத்துல் அகபா பெரிய ஜமராத்துக்கு மட்டும் கல் எறிதல். (கற்களை மினாவிலும் பொறுக்கிக்கொள்ளலாம்)
2. தலை முடியை கத்தரிக்கவோ சிரைக்கவோசெய்தல் பெண்கள் விரல் நுனி அளவுக்குவெட்டிக்கொள்ளவேண்டும். பெண்கள் விரல் நுனி அளவுக்குவெட்டிக்கொள்ளவேண்டும்
3. இஹ்ராமிலிருந்து விடுபடுதல்.
4. மக்காசென்று தவாபுல் இஃபாளா செய்தல்
(குர்பானி: கிரானுக்கும், தமத்துஃக்கும் நிய்யத் வைத்தோர் குர்பானி கொடுக்க வேண்டும்)

11-வது நாள்லுஹருக்குப்பிறகு 7 கற்கள் வீதம் சிறிய,மத்திய,பெரிய ஜமராக்களுக்கு (வரிசையாக)கல் எறிதல். இரவில் கண்டிப்பாக மினாவில் தங்க வேண்டும்.
12-வது நாள்லுஹருக்குப்பிறகு 7 கற்கள் வீதம் சிறிய,மத்திய,பெரிய ஜம்ராக்களுக்கு (வரிசையாக)கல் எறிதல். இரவில் கண்டிப்பாக மினாவில் தங்க வேண்டும்.
13-வது நாள்லுஹருக்குப்பிறகு 7 கற்கள் வீதம் சிறிய, மத்திய, பெரிய ஷைத்தான்களுக்கு (வரிசையாக)கல் எறிதல். இரவில் கண்டிப்பாக மினாவில் தங்க வேண்டும்.
பின்னர் மக்கா சென்று தவாபுல் விதா நிறைவேற்றிவிட்டு மக்காவிலிருந்து வெளியேறவேண்டும். அதன் பிறகு மக்காவில் தங்குவது கூடாது. தவாபுல் விதா ஹஜ்ஜின் கடைசி வணக்கமாக இருக்கவேண்டும்

குறிப்பு :
1.இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கவோ, மயிர்களைநீக்கவோ, நகம் வெட்டவோ, மனைவியுடன் கூடவோ, திருமண ஓப்பந்தம் செய்யவோ, திருமணப்பேச்சுகளில் ஈடுபடவோ, சண்டை சச்சரவுகள் செய்யவோ, கெட்ட வார்த்தைகள் பேசவோ கூடாது.
2.கல் எறியும் நேரம் துல்ஹஜ்ஜு 10 ம் நாள் சூரிய உதயத்திற்குப்பிறகு, லுஹருக்கு முன்னர் கல் எறிய வேண்டும்.11, 12, 13 ஆம் நாட்களில் லுஹருக்குப் பிறகே கல் எறிய வேண்டும். (பெண்கள், சிறுவர்கள், பலவீனர்கள் 10ஆம் நாள் இரவில் கல் எறிந்து கொள்ளலாம்.)
3.துல்ஹஜ் 10 வது நாள் இஹ்ராம் களைந்த பிறகு மனைவியுடன் உறவு கொள்வதைத் தவிர்த்து ஹஜ்ஜில் தடுக்கப்பட்ட யாவும் செய்வதற்கு அனுமதி உள்ளன. தவாபுல் இஃபாளாவுக்குப் பிறகு அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
4.துல்ஹஜ் 12 வது நாள் மினாவிலிருந்து வெளியேற விரும்புவோர் மஃரிபுக்கு முன்னரே வெளியேறி விடவேண்டும். இல்லையேல் அன்றிரவும் மினாவில் தங்கி 13 வது நாள் கல் எறிந்த பிறகே மினாவிலிருந்து வெளியேற வேண்டும். பின்னர் மக்கா சென்று தவாபுல் விதா (பயணதவாஃப்) நிறைவேற்ற வேண்டும். (மாத விலக்கு ஏற்பட்ட பெண்கள் ஊருக்கு பயணம் புறப்படுவதாயின் தவாபுல் விதா செய்யாமல் வெளியேறலாம்.).
5.தவாபுல் இஃபாளா நெரிசல் காரணமாக பிறை 11, 12, 13 நாட்களிலும் நிறைவேற்றலாம்.
6.தவாபில் முதல் மூன்று சுற்றுகளில் மட்டுமே ரமல் - விரைந்து - செல்லவோ, இள்திபாஃ முறையில் தோளைத் திறந்திருக்கவோ - செய்ய வேண்டும். ஏனைய வேளைகளில் தோள் மூடியே இருக்க வேண்டும். (குரைஷிகள் நாயகத்தோழர்களை நோயாளிகள் என குறை கூறிய போது தமது புஜ வலிமையைக்காட்டவே வலது தோளைத் திறந்தும் முதல் மூன்று முறைகள் ஓடியும் காட்டுமாறு நபி (ஸல்) பணித்தார்கள்)

கலைச்சொல் விளக்கம்.
1. யவ்முத்தர்வியா : துல் ஹஜ்ஜு 08 வது நாள்.
2. யவ்மு அரஃபா : 09 வது நாள்
3. யவ்முந் நஹ்ரு : ' 10 வது நாள்
4. அய்;யாமுத்தஷ்ரீக் : 11, 12, 13 வது நாட்கள்
5. தவாஃபுல் குதூம் - ஹஜ்ஜைத் துவங்குவதற்கு முன் செய்யப்படும் முதல் (7 சுற்றுகள் கொண்ட) தவாபுக்கு சொல்லப்படும்.
6.தவாபுல் இஃபாளா அல்லது தவாபுஸ்ஸியாரா - 10 வது நாள் நிறைவேற்றப்படும் தவாஃபாகும்
7.தவாஃபுல் விதா - ஹஜ்ஜிலிருந்து விடை பெறும்போது நிறை வேற்றப்படும் தவாஃபாகும்.
8.ரமல் - தவாபில் விரைந்து செல்லுதல். (முதல் மூன்று சுற்றுகளில்)
9.இள்திபாஃ - ஆண்கள் இஹ்ராம் ஆடையை வலது தோளை திறந்து அணிதல்.( முதல் மூன்று சற்றுகளில் மட்டும்.)

No comments: