Tuesday, November 14, 2006

Don't Drink Coca-Cola and eat Mentos together








Wednesday, March 01, 2006

தலையை சுத்துதா?

இப்படத்தின் நடுவிலுள்ள கரும்புள்ளியை உற்று நோக்கியவாறெ உங்களுடைய தலையை முன்னும் பின்னும் கொண்டு செல்லுங்கள்.





உங்களின் கருத்துக்கு முன்னுரிமை!

Tuesday, January 24, 2006

படத்தைப் பார்த்து கருத்தை தெரிவியுங்கள்

நேரான கோடுகளா? அல்லது வளைவான கோடுகளா?

எத்தனை கரும்புள்ளிகள் உள்ளன?

Sunday, January 15, 2006

ஹாஜிகளுக்கு நிதி உதவி

ஹஜ் பயணத்தில் இறந்த இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி

மக்காவில் உள்ள மினா நகரில் ஜமராக்களின் மீது கல்லெறிக்கும் கடமையின் போது இறந்த இந்தியப் பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் கருணைத் தொகை அளிக்கப்படும்.

இந்த தகவலை மினா நகரில் இருந்து இந்திய கான்சல் ஜெனரல் அவ்சாப் சய்யீத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த நெரிசலில் மொத்தம் 362 பேர் இறந்தனர். இவர்களில் 16 பெண்கள் உள்பட 28 பேர் இந்தியர்கள். இந்த 28 பேரில் 2 பேர் சவூதி அரேபியாவில் தங்கியுள்ளவர்கள்.

இந்தியாவைச் சேர்ந்த 26 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக வழங்கப்படும்.

Friday, January 13, 2006

ஹாஜிகள் கவனத்திற்கு

ஹஜ்ஜின் நிபந்தனைகள் - 6
1. முஸ்லிமாக இருத்தல்
2. புத்தி சுவாதீனமாக இருத்தல்
3. சுதந்திரமானவனாக இருத்தல் (அடிமையாக இல்லாதிருத்தல்)
4. பருவ வயதை அடைந்திருத்தல்
5. உடல் வலிமையும் பணவலிமையும் பெற்றிருத்தல்
6. ஒரு பெண் மஹ்ரமுடன் (அனுமதிக்கப்பட்டவருடன்) ஹஜ்ஜு செய்தல்.

ஹஜ்ஜின் ருக்னுகள் - 4
1. இஹ்ராம் கட்டுவது
2. அரஃபாவில் தங்குவது
3. தவர்ஃபுல் இஃபாளா செய்வது.
4. ஸஃபா மர்வாவுக்கிடையே ஸயீ செய்வது
இவற்றுள் ஏதேனும் ஒன்றை விட்டாலும் ஹஜ் நிறைவேறாது

ஹஜ்ஜின் வாஜிபுகள் - 7
1. மீக்காத்து எல்லையிலிருந்து இஹ்ராம் கட்டுவது.
2. சூரியன் மறைவது (அஸ்தமனம்) வரை அரஃபாவில் தங்குவது.
3. முஸ்தலிஃபாவில் இரவு தங்குவது.
4. அய்யாமுத்தஷ்ரீக்உடைய நாட்களில் ( பிறை 11,12,13) மினாவில் தங்குவது.
5. மூன்று ஜம்ராக்களில் கல் எறிவது .
6. தலை முடியைச் சிரைப்பது அல்லது (முழுவதும்) வெட்டுவது.
7. தவாபுல் விதாஃ (பயண தவாஃப்) இவற்றுள் ஏதேனும் ஒன்று விடுபட்டு விட்டால் பிராயச் சித்தமாக தமு கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஹஜ்ஜு நிறை வேறிவிடும்.
தமு என்பது மிருக பலியோ அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்கவோ அல்லது மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்கவோ செய்வதற்குச் சொல்லப்படும்.

மனதிற் கொள்ளவேண்டியவை
1.அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவதாக (இக்லாஸான) தூய்மையான நிய்யத் வைப்பது.
2. ஹஜ்ஜு சம்பந்தமான சட்டங்களை சரியான முறையில் தெரிந்து நபி (ஸல்) காட்டிய முறைப்படி செய்வது. இதில் தம் விருப்பப்படி செய்ய எவருக்கும் அனுமதி கிடையாது.
3.இதய பூர்வமாக பாவ மன்னிப்புக் கோருவது.

இதன் நிபந்தனைகள்:-
1. செய்து வந்த பாவங்களை முற்றிலுமாக விடுதல
2.அதற்காக மனமுருகுதல்
3. மீண்டும் அப்பாவங்களை செய்யவோ எண்ணவோ கூடாது என மனஉறுதி கொள்ளல்.
4. பிறருக்குச்செலுத்தவேண்டிய (ஹக்குகளை) பாத்தியதைகளை உரியவர்களிடம் சேர்பித்தல். அதாவது : பிறருக்குச் செலுத்தவேண்டிய ஹக்குகளை (கடமைகளை) நிறைவேற்றுவதும், அநியாயமாக அபகரிக்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைப்பதும், கடன்களை வாங்கியவரிடம் திருப்பிக் கொடுப்பதும் அதற்காக சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக்கோருவதும் ஹஜ்ஜு ஏற்கப்படுவதற்குரிய விதிகளாகும். (இவை நான்கும் தவ்பா ஏற்றுக்கொள்வதற்குமுரிய விதிகளாகும்.)
4. பெற்றோரின் திருப்தியைப்பெறுவதும் மனைவி கணவரின் அனுமதியைப் பெறுவதும் மிகவும் இன்றியமையாததாகும்.
5. ஹஜ்ஜுக்குரிய செலவுகள் யாவும் ஹலாலான முறையில் ஈட்டியதாக இருக்க வேண்டும்.
6. வஸிய்யத் ஏதும் செய்வதாயின் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும்.
7. எல்லோருடனும் நல்லுறவோடும் இணக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
8. ஹஜ்ஜ்{டைய அமல்களை பாழ்படுத்தும் வீணான எந்தச்செயலிலும் பேச்சிலும் பிறரைப்புண்படுத்துவதிலும் ஈடுபடாமலிருத்தல் வேண்டும்.
9. பயண ஒழுங்குகளை கடைபிடிக்கவேண்டும்.
10. கவனம் முழுவதும் வணக்க வழி பாடுகளிலும், குர்ஆன் ஓதுவதிலும், நபி(ஸல்) காட்டிய திக்ருகளை மட்டும் ஓதுவதிலும் இருக்க வேண்டும்.
11. நல்லவற்றைப் பேசுவதிலும், தாம் செயலாற்றுவதோடு மட்டுமின்றி பிறரையும் நல் அமல் செய்யத்தூண்ட வேண்டும்.
12. அய்யமுத்தஷரீக்குடைய நாட்களிலும், முஸ்தலிஃபாவிலும், குறிப்பாக அரஃபாவுடைய நாளிலும் அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைத்துப் பாவ மன்னிப்புக் கோருதல்.
13. சிறு தவறுகள் கூட நிகழா வண்ணம் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும்.
14. இவ்விதிகள் யாவும் பேணப்பட்டால் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு 'ஹஜ்ஜு மப்ரூராக (ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக)' ஏற்றுக் கொள்ளப்படும்.
ஹஜ்ஜு முடிந்ததும் தமது ஹஜ்ஜு ஏற்கப்பட்டு விட்டதாக இறுமாந்து விட வேண்டாம். மவ்த்து வரை உங்கள் அமல்களை எடை போட்ட பிறகே ஹஜ்ஜு ஏற்கப்படுவதும் ஏற்கப்படாததும் தீர்மானிக்கப்படும் என்ற இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்களின் அறிவுரை இங்கே மிகவும் சிந்திக்கத்தக்கதாகும்.

செய்யக்கூடாதவை :- முடியை வெட்டுதல் அல்லது பிடுங்குதல் நகத்தை வெட்டுதல் ஆண்கள் தலையை மறைத்தல் நறுமணம் பூசுதல் ஆண்கள் தையலுள்ள ஆடையை அணிதல்.

(குறிப்பு: தடுக்கப்பட்ட இவற்றுள் ஏதேனும் ஒன்றை வேண்டுமென்றே செய்தால் பிராயசித்தமாக ஒரு ஆட்டை அறுத்துப்பலி கொடுக்கவோ, ஆறு ஏழை களுக்கு உணவு கொடுக்கவோ, மூன்று நாட்கள் நோன்பு நோற்கவோ செய்ய வேண்டும்.)

ஹஜ்ஜு ஒரு பார்வை

ஹஜ்ஜு மூன்று வகைகளாக நிறை வேற்றலாம்

1. இஃப்ராத் : ஹஜ்ஜுக்காக மட்டும் நிய்யத் வைத்து இஹ்ராம் கட்டுதல்
நிய்யத் : லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூறி இஹ்ராமுக்கு நிய்யத் வைத்தல்.
2. கிரான் : ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துநிய்யத் வைத்து இஹ்ராம் கட்டுதல்
நிய்யத் : லப்பைக்க ஹஜ்ஜன்வஉம்ரதன் என்று கூறி இஹ்ராமுக்கு நிய்யத் வைத்தல்.
3. தமத்துஃ : ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டவேண்டிய இடத்தில் முதலில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி உம்ராவை நிறைவேற்றிய பிறகு மக்காவில் தங்கியிருந்து ஹஜ்ஜுக்காக எட்டாவது நாளன்று இஹ்ராம் கட்டுதல்.
நிய்யத் : இவ்வாறு செய்பவர் உமராவுக்கு இஹ்ராம் கட்டும்போது லப்பைக்க உம்ரதன் என்றும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும்போது லப்பைக்க ஹஜ்ஜன் என்றும் கூறி இஹ்ராம் கட்டவேண்டும்.

தல்பியா : 'லப்பைக் அல்;லாஹும்ம லப்பைக், லப்பைக்க லாஷரீக்க லக்க லப்பைக் இன்னல ஹம்த வந்நிஃமத்த லக்க வல்முல்க் லா ஷரீக்கலக்;'. (தல்பியாவை இஹ்ராம் கட்டியது முதல் 10வது நாள் கல் எறிவது வரை ஓதவேண்டும்)

ஹஜ்ஜு நாட்களில் ஹாஜிகள் செய்யவேண்டியவை :(துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்யவேண்டியவை.)
இஃப்ராத் முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்ய வேண்டியவை
1. மீக்காத்திலிருந்து இஹ்ராம் கட்டுதல்
2. தவாஃப் செய்தல் (ஹஜருல்அஸ்வதிலிருந்து துவங்கி கஃபாவைச் சுற்றி 7 முறைகள் வலம் வருதல்)
3. ஸஃயீ செய்தல் ஸஃபாவிலிருந்து துவங்கி மர்வா வரை 7 முறைகள் ஸஃயீ செய்வது. (ஸஃபா முதல் மர்வா வரை ஒரு சுற்றும் மர்வா முதல் ;ஸஃபா வரை இன்னொரு சுற்றுமாகும்)
குறிப்பு: தவாபிற்குப் பின்னர் ஸஃயீ செய்ய வில்லையெனில் தவாபுல் இஃபாளா (தவாப் ஸியாரா)வுக்குப்பின் நிறைவேற்ற வேண்டும்

கிரான் முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்ய வேண்டியவை
1.. மீக்காத்திலிருந்து இஹ்ராம் கட்டுதல்
2. தவாஃப் செய்தல் (ஹஜருல்அஸ்வதி-லிருந்து துவங்கி கஃபாவைச் சுற்றி 7 முறைகள் வலம் வருதல்)
3. ஸஃயீ செய்தல் ஸஃபாவிலிருந்து துவங்கி மர்வா வரை 7 முறைகள ஸஃயீ செய்வது. (ஸஃபா முதல் மர்வா வரை ஒரு சுற்றும், மர்வா முதல் ;ஸஃபா வரை இன்னொரு சுற்றுமாகும்)
குறிப்பு: கிரானை நிறைவேற்றுவோர் ஸஃயீயை முடித்தபின் முடியை சிரைக்கவோ வெட்டவோ செய்யாது இஹ்ராமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டு தடுக்கப்பட்டவை களைச் செய்யாது பேணி வர வேண்டும்.தவாபிற்குப் பின்னர் ஸஃயீ செய்யவில்லை-யெனில் தவாபுல் இஃபாளா (தவாப் ஸியாரா) வுக்குப் பின் நிறைவேற்ற வேண்டும்

தமத்துஃ முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் துல்ஹஜ் 8வது நாளுக்கு முன் செய்ய வேண்டியவை
1. மீக்காத்திலிருந்து இஹ்ராம் கட்டுதல்
2. தவாஃப் செய்தல் (ஹஜருல்ஸ்வ திலிருந்து துவங்கி கஃபாவைச்சுற்றி 7 முறைகள் வலம் வருதல்)
3. ஸஃயீ செய்தல் ஸஃபாவிலிருந்து துவங்கி மர்வா வரை 7 முறைகள்;;ஸஃயீ செய்வது.( ஸஃபா முதல் மர்வா வரை ஒரு சுற்றும்,மர்வா முதல் ;ஸஃபா வரை இன்னொரு சுற்றுமாகும்)
4. தலை முடியை கத்தரிக்கவோ சிரைக்கவோ செய்தல்
5. இஹ்ராமிலிருந்து விடுபடல்;;.
குறிப்பு : உம்ராவை முடித்த இவர்கள் 8 ஆம் நாள் இருந்த இடத்திலிருந்துஇஹ்ராம் அணிந்த பின் மினாவுக்குச் செல்ல வேண்டும். 8-வது நாள் (யவ்முத்தர்வியா) மினாவுக்குச் செல்லுதல்(மினாவில்லுஹர்,அஸர்,இஷாதொழுகை களை இரண்டிரண்டுரக்அத்களாக (கஸ்ர்)சுருக்கித் தொழுதல்) மினாவுக்குச் செல்லுதல்(மினாவில்லுஹர்,அஸர்,இஷா தொழுகைகளை இரண்டிரண்டுரக்அத்களாக (கஸ்ர்) சுருக்கித் தொழுதல்) மினாவுக்குச் செல்லுதல்(மினாவில் லுஹர்,அஸர், இஷா தொழுகைகளை இரண்டிரண்டுரக்அத்களாக (கஸ்ர்) சுருக்கித் தொழுதல்)

இஃப்ராத், கிரான், தமத்துஃ மூன்று முறைகளில் நிறைவேற்றுபவர்களுக்கும் பொதுவானவைகள்

துல்ஹஜ் 9-வது நாள்
1. சூரிய உதயத்திற்குப்பிறகு அரஃபாத் செல்லுதல். அரஃபாத்தில் லுஹர், அஸர் இருதொழுகைகளையும் கஸ்ராகவும் ஜம்ஆகவும்- சுருக்கியும் சேர்த்தும்-இரு ரகஅத்களாக தொழ வேண்டும்.( இங்கே ஒரு அதான் இரு இகாமத்துகள் என்பது நினைவிருக்கட்டும்) இங்கு அதிகமாக குர்ஆன் ஓதவும், திக்ர், தல்பியா, தக்பீர், தஸ்பீஹ், தஹ்லீல் ஓதிக்கொண்டிருக்கவும் வேண்டும். துஆ ஓதும்போது ஜபலுர் ரஹ்மத்தை நோக்காது கிப்லாவை முன்னோக்கியே ஓதவேண்டும்.
2. சூரியன் அஸ்தமித்ததும் முஸ்தலிஃபா செல்லுதல்.
3. முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும்; சேர்த்தும் சுருக்கியும் (ஜம்உ,கஸ்ராக) தொழவேண்டும்.(அதாவது : காலதாமதமாயினும் மஃரிபை முதலில் 3 ரகஅத்களாகவும் பின்னர் இஷாவை 2 ரகஅத்களாகவும் தொழ வேண்டும். இங்கே ஒரு அதான் இரு இகாமத்துகள் என்பது நினைவிற் கொள்க)
4. அன்றைய இரவில் முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரு வரை தங்குதல்.

10-வது நாள் ஃபஜ்ருக்குப்பின் சூரிய உதயத்ற்கு முன்னர் மினாவுக்குச் செல்லுதல்
1. ஜம்ரத்துல் அகபா பெரிய ஜமராவுக்கு மட்டும் கல் எறிதல். (கற்களை மினாவிலும் பொறுக்கிக் கொள்ளலாம்)
2. ஆண்கள் தலை முடியை கத்தரிக்கவோ முழுவதுமாக சிரைக்கவோ செய்தல். பெண்கள் தலை முடியின் விரல் நுனி அளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும்.
3. இஹ்ராமிலிருந்து விடுபடுதல்.
4. மக்கா சென்று தவாபுல் இஃபாளா செய்தல்

ஃபஜ்ருக்குப்பின் சூரிய உதயத்திற்கு முன்னர் மினாவுக்குச் செல்லுதல்
1. ஜம்ரத்துல் அகபா பெரிய ஜமராத்துக்கு மட்டும் கல் எறிதல். (கற்களை மினாவிலும் பொறுக்கிக்கொள்ளலாம்)
2. தலை முடியை கத்தரிக்கவோ சிரைக்கவோசெய்தல் பெண்கள் விரல் நுனி அளவுக்குவெட்டிக்கொள்ளவேண்டும். பெண்கள் விரல் நுனி அளவுக்குவெட்டிக்கொள்ளவேண்டும்
3. இஹ்ராமிலிருந்து விடுபடுதல்.
4. மக்காசென்று தவாபுல் இஃபாளா செய்தல்
(குர்பானி: கிரானுக்கும், தமத்துஃக்கும் நிய்யத் வைத்தோர் குர்பானி கொடுக்க வேண்டும்)

11-வது நாள்லுஹருக்குப்பிறகு 7 கற்கள் வீதம் சிறிய,மத்திய,பெரிய ஜமராக்களுக்கு (வரிசையாக)கல் எறிதல். இரவில் கண்டிப்பாக மினாவில் தங்க வேண்டும்.
12-வது நாள்லுஹருக்குப்பிறகு 7 கற்கள் வீதம் சிறிய,மத்திய,பெரிய ஜம்ராக்களுக்கு (வரிசையாக)கல் எறிதல். இரவில் கண்டிப்பாக மினாவில் தங்க வேண்டும்.
13-வது நாள்லுஹருக்குப்பிறகு 7 கற்கள் வீதம் சிறிய, மத்திய, பெரிய ஷைத்தான்களுக்கு (வரிசையாக)கல் எறிதல். இரவில் கண்டிப்பாக மினாவில் தங்க வேண்டும்.
பின்னர் மக்கா சென்று தவாபுல் விதா நிறைவேற்றிவிட்டு மக்காவிலிருந்து வெளியேறவேண்டும். அதன் பிறகு மக்காவில் தங்குவது கூடாது. தவாபுல் விதா ஹஜ்ஜின் கடைசி வணக்கமாக இருக்கவேண்டும்

குறிப்பு :
1.இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கவோ, மயிர்களைநீக்கவோ, நகம் வெட்டவோ, மனைவியுடன் கூடவோ, திருமண ஓப்பந்தம் செய்யவோ, திருமணப்பேச்சுகளில் ஈடுபடவோ, சண்டை சச்சரவுகள் செய்யவோ, கெட்ட வார்த்தைகள் பேசவோ கூடாது.
2.கல் எறியும் நேரம் துல்ஹஜ்ஜு 10 ம் நாள் சூரிய உதயத்திற்குப்பிறகு, லுஹருக்கு முன்னர் கல் எறிய வேண்டும்.11, 12, 13 ஆம் நாட்களில் லுஹருக்குப் பிறகே கல் எறிய வேண்டும். (பெண்கள், சிறுவர்கள், பலவீனர்கள் 10ஆம் நாள் இரவில் கல் எறிந்து கொள்ளலாம்.)
3.துல்ஹஜ் 10 வது நாள் இஹ்ராம் களைந்த பிறகு மனைவியுடன் உறவு கொள்வதைத் தவிர்த்து ஹஜ்ஜில் தடுக்கப்பட்ட யாவும் செய்வதற்கு அனுமதி உள்ளன. தவாபுல் இஃபாளாவுக்குப் பிறகு அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
4.துல்ஹஜ் 12 வது நாள் மினாவிலிருந்து வெளியேற விரும்புவோர் மஃரிபுக்கு முன்னரே வெளியேறி விடவேண்டும். இல்லையேல் அன்றிரவும் மினாவில் தங்கி 13 வது நாள் கல் எறிந்த பிறகே மினாவிலிருந்து வெளியேற வேண்டும். பின்னர் மக்கா சென்று தவாபுல் விதா (பயணதவாஃப்) நிறைவேற்ற வேண்டும். (மாத விலக்கு ஏற்பட்ட பெண்கள் ஊருக்கு பயணம் புறப்படுவதாயின் தவாபுல் விதா செய்யாமல் வெளியேறலாம்.).
5.தவாபுல் இஃபாளா நெரிசல் காரணமாக பிறை 11, 12, 13 நாட்களிலும் நிறைவேற்றலாம்.
6.தவாபில் முதல் மூன்று சுற்றுகளில் மட்டுமே ரமல் - விரைந்து - செல்லவோ, இள்திபாஃ முறையில் தோளைத் திறந்திருக்கவோ - செய்ய வேண்டும். ஏனைய வேளைகளில் தோள் மூடியே இருக்க வேண்டும். (குரைஷிகள் நாயகத்தோழர்களை நோயாளிகள் என குறை கூறிய போது தமது புஜ வலிமையைக்காட்டவே வலது தோளைத் திறந்தும் முதல் மூன்று முறைகள் ஓடியும் காட்டுமாறு நபி (ஸல்) பணித்தார்கள்)

கலைச்சொல் விளக்கம்.
1. யவ்முத்தர்வியா : துல் ஹஜ்ஜு 08 வது நாள்.
2. யவ்மு அரஃபா : 09 வது நாள்
3. யவ்முந் நஹ்ரு : ' 10 வது நாள்
4. அய்;யாமுத்தஷ்ரீக் : 11, 12, 13 வது நாட்கள்
5. தவாஃபுல் குதூம் - ஹஜ்ஜைத் துவங்குவதற்கு முன் செய்யப்படும் முதல் (7 சுற்றுகள் கொண்ட) தவாபுக்கு சொல்லப்படும்.
6.தவாபுல் இஃபாளா அல்லது தவாபுஸ்ஸியாரா - 10 வது நாள் நிறைவேற்றப்படும் தவாஃபாகும்
7.தவாஃபுல் விதா - ஹஜ்ஜிலிருந்து விடை பெறும்போது நிறை வேற்றப்படும் தவாஃபாகும்.
8.ரமல் - தவாபில் விரைந்து செல்லுதல். (முதல் மூன்று சுற்றுகளில்)
9.இள்திபாஃ - ஆண்கள் இஹ்ராம் ஆடையை வலது தோளை திறந்து அணிதல்.( முதல் மூன்று சற்றுகளில் மட்டும்.)